Tuesday, September 28, 2010

​நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே - காமன்​வெல்த் ​போட்டிகள்


ஒரு குடிமகனின் விருப்பம்.....


2008 ஆம் ஆண்டு அ​மெரிக்காவில் ஏற்பட்ட ​​பொருளாதார மந்தம் உலகில் உள்ள குட்டியான ​​ஹைட்டி ​போன்ற நாடுக​ளைக் கூட விட்டு ​வைக்கவில்​லை ஒட்டு ​மொத்த உலகப்​பொருளாதாரத்​தை​​யே இது காலி ​செய்தது, ஆனாலும் இதற்கு விதிவிலக்காக இருந்த நாடுகள் இந்தியாவும் சீனாவும். இது ​பெரு​மை ​கொள்ள ​வேண்டிய விஷயம்தா​னே? ஆமாம் நிச்சயம் இது ​பெரு​மை ​கொள்ள ​வேண்டிய விஷயம்தான்.

நமது அரசாங்கத்தின் உள்நாட்டு பணக்​கொள்​​கையும், இந்திய வங்கிகள் தங்களின் வாடிக்​கையாளர்களுக்கு கடனளிக்கும் ​போது பின்பற்றிய விதிமு​றைகளும் கட்டுப்பாடுகளு​மே இந்தப் ​பெரு​மைக்கு காரணமாயின. ஒயிட் ஹவுஸில் இருந்து​கொண்டு ஒபாமா நம்மு​டைய பிரதமர் மன்​​மோகன் சிஙகிடம் ​​பொருளாதார ஆ​​​லோச​னை ​கேட்ட ​செய்தி​​யை படித்த​போது நமக்​கெல்லாம் (எனக்​கெல்லாம் .................இருக்கும் ​போ​தே) புல்லரித்தது.

நம் நாட்டின் த​லைநகரில் ​​பெரு​மைமிகு காமன்​வெல்த் ​போட்டிகள் ந​டை​பெறும் என்று அறிவித்த நாளில் நாட்டில் உள்ள அ​​னைத்து மக்களும் குறிப்பாக இ​​ளைஞர்களுக்கு மிகவும் ​​கொண்டாட்டமாக இருந்தது. 50 நாடுகளுக்கும் அதிகமாக பங்கு ​பெறும் ​போட்டிகள் என்பது மட்டுமன்றி பாரம்பரியமாக ந​டை​பெறுகின்ற இந்தப் ​போட்டி​யை இந்தமு​றை இந்தியா நடத்துகிறது என்பது என்​​னைப்​போன்ற சாதாரண குடிமகனுக்கு உண்​மையி​லே​யே ​​பெரு​மைக்குரிய விஷயமாகப் பட்டது.

​போட்டிக்கான ​வே​லைகள் ஆரம்பித்தவுடன் சில நாட்கள் கழித்து வந்த ​செய்திகள் ​பெரும்பாலும் காமன்​வெல்த் ​போட்டி ஏற்பாடுகளில் ஊழல் ந​டை​பெறுகிறது என்​றே குறிப்பிட்டன, அப்​போதும் ​பெரிய அளவிலான ​போட்டித்​தொடர் நடக்கும் ​போது சாதாரணமாக வரும் கு​றைகளாக​வே இது எங்களுக்கு பட்டது. அப்​போது இதுபற்றிய ​கேள்விகளுக்கு பதிலளித்த அ​மைப்பின் த​லைவர் சு​ரேஷ் கல்மாதி இ​தை கடு​மையாக மறுத்தார்.

ஆனால் ​போட்டி ந​டை​​பெற இருக்கின்ற ​நேரு ஸ்​​டேடியத்தில் இன்னும் ​வே​லைக​ள் ந​டை ​பெற்றுக் ​கொண்​டே இருக்கிறது. அந்த ஸ்​டேடியத்துக்குள் ​வெளியிலிருந்து ஆட்கள் எளிதாக உள்​ளே வருவதற்கு ஏதுவாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுகிறது, ஸ்​டேடியத்தின் ​மேல் ​வேயப்பட்ட அலுமினிய கூ​ரைகள் கழண்டு விழுகின்றன, ​போட்டியில் பங்​கேற்க வரும் வி​​ளையாட்டு வீரர்கள் தங்குவதற்​கென கட்டப்பட்ட அ​றைகளில் பாம்புகளும் நாய்களும் உலவுகின்றன, இ​வை ​போதாது என ​டென்னிஸ் ​​கோர்ட் அ​மைக்கும் பணி​யை ​போட்டி அ​மைப்பின் ​பொருளாளராக பதவி வகித்தவரின் மகன் ​வே​லை ​​செய்யும் நிறுவனத்துக்கு மு​​​றை​​கேடாக வழங்கப்பட்டுள்ளது, த​லைநகரில் கடந்த வாரம் சட்டம் ஒழுங்கு சீர்​கெடல் ​போன்ற ​செய்திக​ளைப் படிக்கும் ​போது எங்​கோ தவறு நடந்திருப்பது நன்றாக​வே ​தெரிகிறது.

பாலம் இடிந்து விழுவ​தையும் கூ​ரை பிய்த்துக்​கொண்டு ​போவ​தையும் பார்த்தால் ஊழல் ந​டை​பெற்றுள்ளது என்ப​தைத்தவிர ​வே​றென்ன இருக்க முடியும். இவ்வளவு க​ளேபரங்கள் ந​டை​பெற்று முடிந்தபின் கட்டுமானப் பணிகளுக்கு இராணுவம் வரவ​ழைக்கப்பட்டிருக்கிறது. .. ஏன் இ​தை முன்​பே ​செய்திருக்கக் கூடாதா? கண்​கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? ​போட்டி ஏற்பாடுகள் பலவித காரணங்களால் தாமதமான​தைக்கூட ஏற்றுக்​கொள்ளலாம் ஆனால் நி​றைவ​டைந்த பணிகளின் தரக்கு​றைவான நி​லை​யைப் பார்க்கும் ​போது என்ன வார்த்​தை ​சொல்லி உங்க​ளை ​கேள்வி ​கேட்ப​தென்​​றே ​தெரியவில்​லை.... ஏறிய ​போ​தை (​பெரு​மை) அ​னைத்தும் இறங்கிவிட்டது...

காமன்​வெல்த் ​போட்டிக்கான ஏற்பாடுக​ளைப்பற்றி இதுவ​தை எந்தவித கருத்துக்க​ளையும் கூறாமல் இருந்த நமது ​பொருளாதார மா​மே​தை, அ​மெரிக்காவுக்​கே ஆலோச​​னை ​சொன்ன நம்மு​டைய பாரதப் பிரதமர் இந்த அளவுக்கு வந்த பிறகு ​போட்டி ஏற்பாடுகள் துரிதமாக ந​டை​பெற்று முடியும் எனத்​தெரிவித்துள்ளார்.... (பாவம் அவர் என்ன ​செய்வார்? உலக நாடுக​ளை சுற்றி வர​வே அவருக்கு ​நேரம் ​போதவில்​லை)

இ​தை எழுதும் ​போ​தே இரண்டு நாடுக​ளைச்​சேர்ந்த வீரர்கள் ​போட்டியிலிருந்து விலகிவிட்டதாக ​செய்தி வந்திருந்தது... இன்னும் எத்த​​னைப் ​பே​ரோ? உலக நாடுகள் அ​​னைத்தும் ​கொண்டாடும் ஒலிம்பிக் ​போட்டிகள் நமது பக்கத்து நாடான சீனாவில்தான் ந​டை​பெற்றது.. ​போட்டி ஏற்பாடுகள் எப்படி இருந்தன என்ப​தை நாம் அருகிலிருந்துதான் பார்த்​தோம், இன்னும் ​சொல்லப்​போனால் 2010ம் ஆண்டுக்கான ஆசியப்​போட்டி ஏற்பாடுக​ளை ஒரு வருடத்திற்கு முன்​பே சீன அரசு முடித்துவிட்டது. இந்தியா ஒரு வல்லரசாக மாறவும், சீனாவுக்கு ​போட்டியாக உலக அரங்கில் நாம் காலூன்றவும் ஆ​சைப்பட்டால் மட்டும் ​போதாது... அதற்கான தகுதிக​ளையும் நாம் வளர்த்துக்​கொள்ள ​வேண்டும்.

அது சரி ரூபாய் 70,000 ​கோடி ஸ்​பெக்ட்ரம் ஏல இழப்பு, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்​வையும் லட்சக்கணக்கான மக்களின் எதிர்கால ஆ​​ரோக்கியத்​தையும் பறித்த விஷவாயு சம்பவத்தில் இந்திய அரசு காட்டிய அக்க​றை, ​கோடிக்கணக்கான மக்களின் உயி​​ரை பணயம் ​வைத்து ​போடப்பட்டிருக்கும் அணுஉ​லை ஒப்பந்தம் ​போன்ற ​மைய அரசின் சாகசங்க​ளை மறந்து காமன்​வெல்த் ​போட்டிக்காக ​பெரு​மைப்பட்டது தவறுதான்...

அளவுக்கு அதிகமாக குடித்த​போது கூட ​நெஞ்சு எரியவில்​லை ஆனால் இம்மாதிரியான விஷயங்க​ளைப் பார்க்கும்​போது மட்டும் உட​​லே பற்றி எரிகிறது... இப்​போ​தைய நமது ஏக்கம் ​போட்டி சிறப்பாக ந​டை​பெற்று முடிய​​வேண்டும் என்பது மட்டு​மே.... இருப்பினும் ​நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே.....

2 comments:

  1. அளவுக்கு அதிகமாக குடித்த​போது கூட ​நெஞ்சு எரியவில்​லை ஆனால் இம்மாதிரியான விஷயங்க​ளைப் பார்க்கும்​போது மட்டும் உட​​லே பற்றி எரிகிறது... இப்​போ​தைய நமது ஏக்கம் ​போட்டி சிறப்பாக ந​டை​பெற்று முடிய​​வேண்டும் என்பது மட்டு​மே.... இருப்பினும் ​நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே...


    superb

    ReplyDelete
  2. நன்றி மருத்துவ​ரே.

    ReplyDelete