Wednesday, September 8, 2010

இருளில் மூழ்கியப் பேரரசு

வரலாற்றின் இருளில் மூழ்கிய பேரரசின் கதை...ம் நாட்டில் தோன்றிய பல பேரரசுகளில் மிகுந்த செல்வ செழிப்புடன் விளங்கியது விஜயநகரப் பேரரசாகும். இன்று அழிவு நிலைவில் உள்ள ஹம்பி நகரம் விஜயநகரப்பேரரசின் பெருமையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.இப்பேரரசின் வரலாறு பலதிருப்பங்கள் கொண்ட திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். பேரரசின் தொடக்கத்தைப்பற்றி வரலாற்று அறிஞர்களிடையே சிறு சிறு வேறுபாடுகள் இருப்பினும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் அம்சம் துங்கபத்திராவின் வடகரையிலுள்ள ஆனெகுண்டீ என்ற கோட்டைக்கு எதிர்ப்புறத்தில் அந்நதியின் தென் கரையில், சங்கமரின் ஐந்து புதல்வர்கள் விசயநகரையும், விசயநகரப் பேரரரையும் நிறுவினர். அந்த ஐந்து புதல்வர்களில் ஹரிகரர், புக்கர் என்போர் மிகச் சிறந்தவர்களாவர். அக்காலத்தில் சிறப்புற்றிருந்த பிராமண முனிவரும் அறிஞருமான மாதவ வித்யாரண்யர் மற்றும் அவருடைய சகோதரரான வேதத்திற்குப் புகழ் பெற்ற உரையெழுதிய சாயனர் முதலியவர்களின் முலம் ஊக்கவுணர்ச்சிபெற்று அவர்கள் இந்தப் புதிய முயற்சியில் ஈடுபட்டனர், (வரலாற்றாசிரியர்களிடையே இதில் கருத்து வேறுபாடுகளும் உண்டு).விசயநகரப்பேரரசானது நான்கு அரச வம்சத்தினரால் (வம்சம் என்றதும் எனக்கு தற்போது வெளியாகியுள்ள வம்சம் படம்..... சரி சரி நமக்கு தற்போதைய அரசியல் எதற்கு....) ஆளப்பட்டது. இதில் முதலாவது அரச மரபு இதைத் தோற்றுவித்த சங்கமரின் பெயரால் வழங்கப்படுகிறது, மற்ற மரபுகள் சளுவ, துளுவ மற்றும் அறவீடு ஆகும். புகழ்பெற்ற நமது கிருக்ஷ்ணதேவராய மன்னர் துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர், இவருடைய அவையில்தான் அஷ்டதிக் கஜங்கள் (எட்டு யானைகள்) என்றழைக்கப்பட்ட புலவர்கள் கவிபாடினார்கள். (புலவர்கள் கவிபாடுவதை பற்றி கேட்டாலே எனக்கு 23ம் புலிகேசி படத்தில் வரும் பாணப்பத்திர ஓணான்டிதான் நினைவுக்கு வந்துவிடுகிறார்... சரி சரி திட்டாதீர்கள்....)கி.பி. 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தில்லியை ஆண்ட துக்ளக் மன்னர்கள் தக்காணத்தின் மீது கண்வைத்த உடன் மாட்டிக்கொண்டவர்கள் விசயநகர அரசர்கள் எனினும் அதுவே விசயநகரப் பேரரசின் வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. படையெடுத்த சுல்தான்கள் ஹரிகரர், புக்கர் இருவரையும் பிணைக்கைதியாக பிடித்து சென்று அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்கள் பிறகு அங்கிருந்து தமிழ் சினிமாவில் தப்பிப்பது போல் தப்பித்து விசயநகரம் வந்தடைந்தவுடன் இருவரையும் வரவேற்று முதல் வேலையாக அவர்களை மறுபடியும் இந்து மதத்திற்கு மாற்றினார் மாதவ வித்யாரண்யர்...


ஐயையோ  மனம் தெளிவு பெறுகிறது.... ஒரு 'வ' குடித்துவிட்டு வருகிறேன்..... பிறகு தொடருவோம்.....

No comments:

Post a Comment