Wednesday, November 3, 2010

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்நண்பர்களுக்கு இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

Monday, November 1, 2010

ஒபாமா - வைகோ

ரெங்கும் ஒரே பேச்சு - வேறொன்றும் இல்லை ஒபாமாவின் வருகைதான் அது. எந்த நாளிதழை திருப்பினாலும் ஒபாமாவைப் பற்றியே இருக்கிறது. இந்த நேரத்தில் கடந்த வருடம் ரஷ்யாவில் நடந்ததை நினைவு கூற விரும்புகிறேன், இராணுவம் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாஸ்கோ சென்றிருந்தார் ஒபாமா, அவர் ரஷ்யா வந்த செய்தியை அந்நாட்டின் நாளிதழ்கள் மிகச் சாதாரண செய்தியாக வெளியிட்டிருந்தன. மக்களில் பலருக்கு அவர் ரஷ்யா வந்ததே தெரியவில்லை. அங்கெல்லாம் தலைவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதில்லை. ஒபாமா என்ற உணர்ச்சிகர பேச்சாளரைப் போல பல மடங்கு அதிகமாக பேசும் தலைவர்களை பார்த்து அவர்களின் செயல்களால் நொந்தவர்கள் அவர்கள்.

எத்தனை கோடி ரூபாய் வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம். ஊழல் செய்த பணத்தில் பாதியை செலவு செய்தாவது ஊழல் தொடர்பான வழக்கை ஒன்றுமில்லாமல் செய்யலாம், உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கூறிய கருத்தையும்
இறுதித் தீர்ப்பல்ல என்று வசனம் பேசலாம், இனம் மொழி என்று பேசி மக்களின் நாடியை தன் உள்ளங்கையில் வைத்திருக்கலாம், பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போகும்போது அதை விட்டுவிட்டு நிறத்தையும் பிடித்துக் கொள்ளலாம், இவையனைத்தும் நடப்பது வேறெங்கும் இல்லை நமது இந்தியத் திருநாட்டில்தான்.

வைகோ - தன்மானத் தலைவர், மேடைகளில் முழங்கும் போது தன் எதிரே அமர்ந்திருப்பவர்களை தான் உணர்ச்சிவசப்படுவது போல் உணர்ச்சிவசப்பட வைப்பவர். இனம் மொழி என்ற வார்த்தைகளை தமிழக முதல்வர் கலைஞருக்குப் பிறகு அதிகமாக உபயோகித்தவர் இவர் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்னவென்றால் இந்தியா வரும் ஒபாமாவை சிறப்பான முறையில் வரவேற்கவேண்டுமாம். வரவேற்பது நம் பண்பாடு என்பது இருக்கட்டும் ஆனால் இந்த தன்மானத் தலைவருக்கு திடீரென ஏற்பட்ட உணர்வுக்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா.. கருப்பு நிறத் தலைவரை வரவேற்கவேண்டுமாம், அதே சமயத்தில் அவரின் பொருளாதார கொள்கைகளைப் பற்றி இப்போது விமர்சிக்கக் கூடாதாம்.

நிறம் கருப்பாயிருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன? 66000 அப்பாவிப் பொதுமக்களை ஈராக்கில் கொன்று குவித்துவிட்டு உயிர்ப்பசி அடங்காமல் ஆப்கானிஸ்தானிலும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க இராணுவத்தின் தலைவர்தானே ஒபாமா. ஈராக் போரில் ஈடுபட்டது ஜார்ஜ புஷ்ஷின் ஆட்சியில்தான் என்றாலும் அதைப்பற்றிய உண்மைகளை மறைத்தது ஒபாமாவின் அரசாங்கம்தானே.. அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற இந்தியாவை நெருக்கியது யார்? இந்தியர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்படியான சட்டம் இயற்ற துடித்தது இதே ஒபாமாதானே..

இப்போது நிறத்தைப்பற்றி பேசும் வைகோ ஒபாமாவின் இச்செயல்களை ஏற்றுக்கொள்வாரா? இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராஜபட்சவை நீங்கள் எதிர்த்தது போல் யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள், ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்க ஒரு நாடு ஈடுபட்டபோது தமிழ் மொழி தமிழன் என்ற வார்த்தைகளை உபயோகித்து அதிகமாக அரசியல் இலாபம் அடைந்த இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் வாய்மூடி மெளனம் சாதித்த வேளையில் அதை நீங்கள் எதிர்த்தவிதம் உண்மையில் அருமை. ஆனால் இப்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் படித்தபிறகு என்னசொல்வதென்றே தெரியவில்லை.

இலங்கையின் ராஜபட்ச இந்தியாவுக்கு வரக்கூடாது என்று சொல்லும் நாம் ஒபாமாவை மட்டும் ஏன் வரவேற்கவேண்டும். இலங்கையில் போனால் உயிர் ஆனால் ஆப்கானிஸ்தானில் போனால் மயிரா?