Tuesday, September 28, 2010

​நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே - காமன்​வெல்த் ​போட்டிகள்


ஒரு குடிமகனின் விருப்பம்.....


2008 ஆம் ஆண்டு அ​மெரிக்காவில் ஏற்பட்ட ​​பொருளாதார மந்தம் உலகில் உள்ள குட்டியான ​​ஹைட்டி ​போன்ற நாடுக​ளைக் கூட விட்டு ​வைக்கவில்​லை ஒட்டு ​மொத்த உலகப்​பொருளாதாரத்​தை​​யே இது காலி ​செய்தது, ஆனாலும் இதற்கு விதிவிலக்காக இருந்த நாடுகள் இந்தியாவும் சீனாவும். இது ​பெரு​மை ​கொள்ள ​வேண்டிய விஷயம்தா​னே? ஆமாம் நிச்சயம் இது ​பெரு​மை ​கொள்ள ​வேண்டிய விஷயம்தான்.

நமது அரசாங்கத்தின் உள்நாட்டு பணக்​கொள்​​கையும், இந்திய வங்கிகள் தங்களின் வாடிக்​கையாளர்களுக்கு கடனளிக்கும் ​போது பின்பற்றிய விதிமு​றைகளும் கட்டுப்பாடுகளு​மே இந்தப் ​பெரு​மைக்கு காரணமாயின. ஒயிட் ஹவுஸில் இருந்து​கொண்டு ஒபாமா நம்மு​டைய பிரதமர் மன்​​மோகன் சிஙகிடம் ​​பொருளாதார ஆ​​​லோச​னை ​கேட்ட ​செய்தி​​யை படித்த​போது நமக்​கெல்லாம் (எனக்​கெல்லாம் .................இருக்கும் ​போ​தே) புல்லரித்தது.

நம் நாட்டின் த​லைநகரில் ​​பெரு​மைமிகு காமன்​வெல்த் ​போட்டிகள் ந​டை​பெறும் என்று அறிவித்த நாளில் நாட்டில் உள்ள அ​​னைத்து மக்களும் குறிப்பாக இ​​ளைஞர்களுக்கு மிகவும் ​​கொண்டாட்டமாக இருந்தது. 50 நாடுகளுக்கும் அதிகமாக பங்கு ​பெறும் ​போட்டிகள் என்பது மட்டுமன்றி பாரம்பரியமாக ந​டை​பெறுகின்ற இந்தப் ​போட்டி​யை இந்தமு​றை இந்தியா நடத்துகிறது என்பது என்​​னைப்​போன்ற சாதாரண குடிமகனுக்கு உண்​மையி​லே​யே ​​பெரு​மைக்குரிய விஷயமாகப் பட்டது.

​போட்டிக்கான ​வே​லைகள் ஆரம்பித்தவுடன் சில நாட்கள் கழித்து வந்த ​செய்திகள் ​பெரும்பாலும் காமன்​வெல்த் ​போட்டி ஏற்பாடுகளில் ஊழல் ந​டை​பெறுகிறது என்​றே குறிப்பிட்டன, அப்​போதும் ​பெரிய அளவிலான ​போட்டித்​தொடர் நடக்கும் ​போது சாதாரணமாக வரும் கு​றைகளாக​வே இது எங்களுக்கு பட்டது. அப்​போது இதுபற்றிய ​கேள்விகளுக்கு பதிலளித்த அ​மைப்பின் த​லைவர் சு​ரேஷ் கல்மாதி இ​தை கடு​மையாக மறுத்தார்.

ஆனால் ​போட்டி ந​டை​​பெற இருக்கின்ற ​நேரு ஸ்​​டேடியத்தில் இன்னும் ​வே​லைக​ள் ந​டை ​பெற்றுக் ​கொண்​டே இருக்கிறது. அந்த ஸ்​டேடியத்துக்குள் ​வெளியிலிருந்து ஆட்கள் எளிதாக உள்​ளே வருவதற்கு ஏதுவாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுகிறது, ஸ்​டேடியத்தின் ​மேல் ​வேயப்பட்ட அலுமினிய கூ​ரைகள் கழண்டு விழுகின்றன, ​போட்டியில் பங்​கேற்க வரும் வி​​ளையாட்டு வீரர்கள் தங்குவதற்​கென கட்டப்பட்ட அ​றைகளில் பாம்புகளும் நாய்களும் உலவுகின்றன, இ​வை ​போதாது என ​டென்னிஸ் ​​கோர்ட் அ​மைக்கும் பணி​யை ​போட்டி அ​மைப்பின் ​பொருளாளராக பதவி வகித்தவரின் மகன் ​வே​லை ​​செய்யும் நிறுவனத்துக்கு மு​​​றை​​கேடாக வழங்கப்பட்டுள்ளது, த​லைநகரில் கடந்த வாரம் சட்டம் ஒழுங்கு சீர்​கெடல் ​போன்ற ​செய்திக​ளைப் படிக்கும் ​போது எங்​கோ தவறு நடந்திருப்பது நன்றாக​வே ​தெரிகிறது.

பாலம் இடிந்து விழுவ​தையும் கூ​ரை பிய்த்துக்​கொண்டு ​போவ​தையும் பார்த்தால் ஊழல் ந​டை​பெற்றுள்ளது என்ப​தைத்தவிர ​வே​றென்ன இருக்க முடியும். இவ்வளவு க​ளேபரங்கள் ந​டை​பெற்று முடிந்தபின் கட்டுமானப் பணிகளுக்கு இராணுவம் வரவ​ழைக்கப்பட்டிருக்கிறது. .. ஏன் இ​தை முன்​பே ​செய்திருக்கக் கூடாதா? கண்​கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? ​போட்டி ஏற்பாடுகள் பலவித காரணங்களால் தாமதமான​தைக்கூட ஏற்றுக்​கொள்ளலாம் ஆனால் நி​றைவ​டைந்த பணிகளின் தரக்கு​றைவான நி​லை​யைப் பார்க்கும் ​போது என்ன வார்த்​தை ​சொல்லி உங்க​ளை ​கேள்வி ​கேட்ப​தென்​​றே ​தெரியவில்​லை.... ஏறிய ​போ​தை (​பெரு​மை) அ​னைத்தும் இறங்கிவிட்டது...

காமன்​வெல்த் ​போட்டிக்கான ஏற்பாடுக​ளைப்பற்றி இதுவ​தை எந்தவித கருத்துக்க​ளையும் கூறாமல் இருந்த நமது ​பொருளாதார மா​மே​தை, அ​மெரிக்காவுக்​கே ஆலோச​​னை ​சொன்ன நம்மு​டைய பாரதப் பிரதமர் இந்த அளவுக்கு வந்த பிறகு ​போட்டி ஏற்பாடுகள் துரிதமாக ந​டை​பெற்று முடியும் எனத்​தெரிவித்துள்ளார்.... (பாவம் அவர் என்ன ​செய்வார்? உலக நாடுக​ளை சுற்றி வர​வே அவருக்கு ​நேரம் ​போதவில்​லை)

இ​தை எழுதும் ​போ​தே இரண்டு நாடுக​ளைச்​சேர்ந்த வீரர்கள் ​போட்டியிலிருந்து விலகிவிட்டதாக ​செய்தி வந்திருந்தது... இன்னும் எத்த​​னைப் ​பே​ரோ? உலக நாடுகள் அ​​னைத்தும் ​கொண்டாடும் ஒலிம்பிக் ​போட்டிகள் நமது பக்கத்து நாடான சீனாவில்தான் ந​டை​பெற்றது.. ​போட்டி ஏற்பாடுகள் எப்படி இருந்தன என்ப​தை நாம் அருகிலிருந்துதான் பார்த்​தோம், இன்னும் ​சொல்லப்​போனால் 2010ம் ஆண்டுக்கான ஆசியப்​போட்டி ஏற்பாடுக​ளை ஒரு வருடத்திற்கு முன்​பே சீன அரசு முடித்துவிட்டது. இந்தியா ஒரு வல்லரசாக மாறவும், சீனாவுக்கு ​போட்டியாக உலக அரங்கில் நாம் காலூன்றவும் ஆ​சைப்பட்டால் மட்டும் ​போதாது... அதற்கான தகுதிக​ளையும் நாம் வளர்த்துக்​கொள்ள ​வேண்டும்.

அது சரி ரூபாய் 70,000 ​கோடி ஸ்​பெக்ட்ரம் ஏல இழப்பு, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்​வையும் லட்சக்கணக்கான மக்களின் எதிர்கால ஆ​​ரோக்கியத்​தையும் பறித்த விஷவாயு சம்பவத்தில் இந்திய அரசு காட்டிய அக்க​றை, ​கோடிக்கணக்கான மக்களின் உயி​​ரை பணயம் ​வைத்து ​போடப்பட்டிருக்கும் அணுஉ​லை ஒப்பந்தம் ​போன்ற ​மைய அரசின் சாகசங்க​ளை மறந்து காமன்​வெல்த் ​போட்டிக்காக ​பெரு​மைப்பட்டது தவறுதான்...

அளவுக்கு அதிகமாக குடித்த​போது கூட ​நெஞ்சு எரியவில்​லை ஆனால் இம்மாதிரியான விஷயங்க​ளைப் பார்க்கும்​போது மட்டும் உட​​லே பற்றி எரிகிறது... இப்​போ​தைய நமது ஏக்கம் ​போட்டி சிறப்பாக ந​டை​பெற்று முடிய​​வேண்டும் என்பது மட்டு​மே.... இருப்பினும் ​நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே.....

Sunday, September 26, 2010

​செல்​போன் சினுங்கல் 2
இன்று வந்த குறுந்தகவல்கள் இ​வை... 

படித்​தேன்... ரசித்​தேன்...

இ​தோ உங்களுக்கும்...
1.
'Hello' means

H = Hi Chellam

E = Eppadi irukka

L = Limita Saapidu

L = Life nalla irukka?

O = Odamba paathukko..

So HELLO my dear friend...


(ஒரு Hello க்கு இவ்வளவு விரிவாக்கமா?)


2.
யாராவது உன்​​னை 'நாய்' னு ​சொன்னா be cool.. 

குரங்கு னு ​சொன்னா pls relax..

ஆனா நீங்க அழகா இருக்​கேன்னு ​சொன்னா 
காத்திருக்க​வே ​வேண்டாம்.... பளார்னு ஒரு அ​றை விட்டுரு...

கா​மெடி எல்லாம் ஒரு வரம்பு வ​ரைக்கும்தான்....

(உக்காந்து ​​​யோசிப்பாய்ங்க​ளோ?......)


3.
​தொட்டுவிடும் தூரத்தில் ​வெற்றி இல்​லை....

ஆனாலும் அ​தை விட்டுவிடும் எண்ணத்தில் நான் இல்​லை...


(முயற்சியு​டை​​யோர் இகழ்ச்சிய​டையார்......)


4.
True friendship:
காயப்படுத்தி காணாமல் ​போகும் காத​லை விட...
.
.
.
.
.
.
.
காரித்துப்பினாலும் treat ​கேட்கும் நட்​பே சிறந்தது.....

(நண்​பேண்டா........)


5.
ம​னைவி: எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி ​தெளிக்கிறீங்க?

கணவன்: உங்க அப்பா உன்​னை 'பூ' மாதிரி பாத்துக்க ​சொன்னார்ல அதான்.....


(அஸிஸ்டன்ட் ​டைரக்டர்ஸ்.... ​நோட் பண்ணுங்கப்பா....)


6.
Pls pass this number to all.. This is Tamilnadu Swine Flu helpline number: 044-24321569


(நல்ல தகவல்)

7.
​நேர்முகத்​தேர்வு:


என்னிடம் இருக்கும் வி​டைகளுக்கான 
​கேள்விகள் எப்​போதும் ​கேட்கப்படுவதில்​லை..

(​எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு....)
8.
நண்பன் 1: மச்சி என் ​​கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் டா என்ன Gift குடுக்கலாம்?

நண்பன் 2: அவ எப்படி இருப்பா?

நண்பன் 1: சூப்பரா இருப்பா டா..

நண்பன் 2: அப்ப என் ​செல் நம்பர் குடு டா........


(என்ன ஒரு வில்லத்தனம்.......)


 த​லைவா.... ​​​லேசாக ........இறங்குவது ​போல் உள்ளது.... பிறகு சந்திப்​போம்..


Friday, September 24, 2010

செல்போன் சினுங்கல்

வணக்கம் தலைவர்களே...


.............தலைக்கேறியதால் சில நாட்கள் காணாமல் போகும்படி ஆகிவிட்டது.... சரி அதைவிடுங்கள், நேற்று ஒரு நாளில் என்னுடைய கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல்களை கீழே கொடுத்துள்ளேன் தகவல்கள் குறுகியனவாக இருப்பினும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது,
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.....


1.
உன் வலியில் பிறந்ததால்தான் என்னவோ
வலிக்கும் போதெல்லாம்
உன்னையே அழைக்கின்றேன்....

"அம்மா"

(நெஞ்ச தொட்டுட்டான்.....)


2.
In year 1902 Vivekananda appeared an exam, 115 question asked & mentioned 'Do any 100'
Vivekananda solved all & put note 'Check any 100'
That's confidence 
 
(இதை நம்ம பசங்ககிட்ட போய் சொல்லுங்க தலைவரே....)


3.
தண்ணி அடின்னு சொல்லுறவன் நண்பனல்ல ராவா அடிக்கும் போது
"மச்சான் தண்ணிஊத்தி அடி"ன்னு சொல்லுறவன்தான் உண்மையான் நண்பன்!!!!

நண்பேன்டா......

(பயபுள்ள என்னை மாதிரியே இருக்கானே.....)


4.
Student: கடலுக்கு நடுவில ஒரு மாமரம் இருக்கு அதை எப்படி பறிப்ப?
 
Teacher: பறவையா மாறி பறிப்பேன் டீச்சர்
 
Student: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவான்?

Teacher: கடலுக்கு நடுவில மாமரத்தை உன் அப்பனா வெச்சான்?

Teacher shocks
Student Rocksஸ.

(.........இப்பவே இப்படி இருக்குதே இந்தபுள்ள.... இவன் பெரிசாகி என்னவெல்லாம் பண்ணபோறானோ?)


5.
Teacher: ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?
Student: டாக்டர்தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார் டீச்சர் !!

Teacher: ?????

(பிஞ்சிலேயே பழுத்தது போல......)


6.
பஞ்ச் சொல்லி ரொம்ப நாளாச்சு....

எவ்வளவுதான் கில்லாடியா இருந்தாலும்
டாஸ்மாக் போனா தள்ளாடிதான் வரனும்.....

(உன் சிந்தனையும் செயலும் என்னைப் போலவே உள்ளது.... கககபோ)


7.
அப்பா: ஏன்டா இவ்வளவு கம்மியா மார்க் வாங்கியிருக்க?

மகன்: விலைவாசியெல்லாம் ரொம்ப ஏறிப்போச்சு.... எதையுமே அதிகமா வாங்கமுடியலப்பா....

(இந்தியாவின் விலைவாசி உயர்வு இப்போது இந்திய மாணவர்களுக்கும் தெரிந்துவிட்டதே.......)


8.
கணவன்: உங்க அப்பா பெரிய ரோடு காண்டிராக்டரா இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா?

மனைவி: ஏன்?

கணவன்: முதலிரவு ரூமுக்கு வெளிய ஆட்கள் வேலை செய்கிறார்கள் அப்படின்னு போர்டு மாட்டி வெச்சிருக்கார்.......

(சரியா தானே சொல்லியிருக்கார்........)


9.
What is Success?
In 1988 Tendulkar failed in English on 10th std.
 
Now in 2010
 
10th std English 1st lesson is about Tendulkar..
that's success.
 
(கேப்டனுக்கு சல்யூட்)


10.
இந்த உலகத்துல நல்லவங்கள எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க ஏன்னா?
.
.
.
.
.
.
.
.
.
.
நான் வீட்ல இருக்கேன்


(முடியலடா சாமி...... அடிச்சதெல்லாம் எறங்கிப் போச்சி, கடை மூடிவிடப் போகிறார்கள்.... பிறகு சந்திப்போம்..)

Tuesday, September 14, 2010

காதல் மயக்கம்....'I Love You..'
மூன்றெழுத்து கெட்ட வார்த்தை நம் பெற்றோர்களுக்கு! அதே வார்த்தை தேசியகீதம் போன்றது நம்முடைய இளைஞர்களுக்கு!! நான் உன்னை காதலிக்கிறேன் (ஐ லவ் யூ) இந்த வார்த்தையை ஒரு பெண்ணிடம் சொல்லி முடிப்பதற்க்குள் தொண்டை வற்றி நா உலர்ந்து ஒரு நோயாளியின் நிலையை அடைந்து மீள்வார்கள் நம்முடைய இளைஞர்கள்.

இங்கே நம்முடைய வலைத்தள நன்பர் ஒருவர் உலகில் உள்ள 100 மொழிகளில் ஐ லவ் யூ சொல்வது எப்படி என அனுப்பியுள்ளார். நன்பர்களுக்காக இதோ அந்த வார்த்தைகள்...


(பின்குறிப்பு) நன்பர்களே இம்மொழிகளை அறிந்த பெண்களிடம் இவ்வார்த்தைகளை சொல்லி உதை வாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல....


 English -                             I love you
 Afrikaans -                           Ek het jou lief
Albanian -                             Te dua
Arabic -                                  Ana behibak (to male)
Arabic -                                  Ana behibek (to female)
Armenian -                             Yes kez sirumen
Bambara -                              M'bi fe
Bangla -                                 Aamee tuma ke bhalo aashi
Belarusian -                           Ya tabe kahayu
Bisaya -                                  Nahigugma ako kanimo
Bulgarian -                             Obicham te
Cambodian -                         Soro lahn nhee ah
Cantonese Chinese -           Ngo oiy ney a
Catalan -                                T'estimo
Cheyenne -                           Ne mohotatse
Chichewa -                           Ndimakukonda
Corsican -                              Ti tengu caru (to male)
Creol -                                    Mi aime jou
Croatian -                              Volim te
Czech -                                  Miluji te
Danish -                                 Jeg Elsker Dig
Dutch -                                   Ik hou van jou
Esperanto -                           Mi amas vin
Estonian -                              Ma armastan sind
Ethiopian -                            Afgreki'
Faroese -                               Eg elski teg
Farsi -                                     Doset daram
Filipi no -                               Mahal kita
Finnish -                                Mina rakastan sinua
French -                                 Je t'aime, Je t'adore
Gaelic -                                  Ta gra agam ort
Georgian -                             Mikvarhar
German -                               Ich liebe dich
Greek -                                   S'agapo
Gujarati -                                Hoo thunay prem karoo choo
Hiligaynon -                          Palangga ko ikaw
Hawaiian -                            Aloha wau ia oi
Hebrew -                               Ani ohev otah (to female)
Hebrew -                               Ani ohev et otha (to male)
Hiligaynon -                          Guina higugma ko ikaw
Hindi -                                    Hum Tumhe Pyar Karte hae
Hmong -                                Kuv hlub koj
Hopi -                                    Nu' umi unangwa'ta
Hungarian -                           Szeretlek
Icelandic -                             Eg elska tig
Ilonggo -                                Palangga ko ikaw
Indonesian -                          Saya cinta padamu
Inuit -                                      Negligevapse
Irish -                                      Taim i' ngra leat
Italian -                                   Ti amo
Japanese -                            Aishiteru
Kannada -                             Naanu ninna preetisuttene
Kapampangan -                   Kaluguran daka
Kiswahili -                             Nakupenda
Konkani -                               Tu magel moga cho
Korean -                                Sarang Heyo
Latin -                                    Te amo
Latvian -                                Es tevi miilu
Lebanese -                           Bahibak
Lithuanian -                          Tave myliu
Malay -                                  Saya cintakan mu / Aku cinta padamu
Malayalam -                          Njan Ninne Premikunnu
Chinese -                              Wo ai ni
Marathi -                                Me tula prem karto
Mohawk -                              Kanbhik
Moroccan -                           Ana moajaba bik
Nahuatl -                               Ni mits neki
Navaho -                               Ayor anosh'ni
Norwegian -                          Jeg Elsker Deg
Pandacan -                           Syota na kita!!
Pangasinan -                        Inaru Taka
Papiamento -                       Mi ta stimabo
Persian -                               Doo-set daaram
Pig Latin -                             Iay ovlay ouyay
Polish -                                  Kocham Ciebie
Portuguese -                         Eu te amo
Romanian -                           Te ubesk
Russian -                               Ya tebya liubliu
Scot Gaelic -                         Tha gra\dh agam ort
Serbian -                               Volim te
Setswana -                            Ke a go rata
Sign Language -                  ,\,,/ (represents position of fingers when signing 'I Love You')
Sindhi -                                  Maa tokhe pyar kendo ahyan
Sioux -                                   Techihhila
Slovak -                                 Lu`bim ta
Slovenian -                           Ljubim te
Spanish -                              Te quiero / Te amo
Swahili -                                Ninapenda wewe
Swedish -                             Jag alskar dig
Swiss-German -                   Ich lieb Di
Tagalog -                               Mahal kita
Taiwanese -                          Wa ga ei li
Tahitian -                               Ua Here Vau Ia Oe
Tamil -                                   Nan unnai kathalikiren
Telugu -                                 Nenu ninnu premistunnanu
Thai -                                     Chan rak khun (to male)
Thai -                                     Phom rak khun (to female)
Turkish -                                Seni Seviyorum
Ukrainian -                            Ya tebe kahayu
Urdu -                                     mai aap say pyaar karta hoo
Vietnamese -                        Anh ye^u em (to female)
Vietnamese -                        Em ye^u anh (to male)
Welsh -                                  'Rwy'n dy garu
Yiddish -                                Ikh hob dikh
Yoruba -                                 Mo ni feமதுமயக்கத்தை காட்டிலும் காதல் மயக்கம் சூப்பர் போதையா இருக்குதே.......

Wednesday, September 8, 2010

இருளில் மூழ்கியப் பேரரசு

வரலாற்றின் இருளில் மூழ்கிய பேரரசின் கதை...ம் நாட்டில் தோன்றிய பல பேரரசுகளில் மிகுந்த செல்வ செழிப்புடன் விளங்கியது விஜயநகரப் பேரரசாகும். இன்று அழிவு நிலைவில் உள்ள ஹம்பி நகரம் விஜயநகரப்பேரரசின் பெருமையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.இப்பேரரசின் வரலாறு பலதிருப்பங்கள் கொண்ட திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். பேரரசின் தொடக்கத்தைப்பற்றி வரலாற்று அறிஞர்களிடையே சிறு சிறு வேறுபாடுகள் இருப்பினும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் அம்சம் துங்கபத்திராவின் வடகரையிலுள்ள ஆனெகுண்டீ என்ற கோட்டைக்கு எதிர்ப்புறத்தில் அந்நதியின் தென் கரையில், சங்கமரின் ஐந்து புதல்வர்கள் விசயநகரையும், விசயநகரப் பேரரரையும் நிறுவினர். அந்த ஐந்து புதல்வர்களில் ஹரிகரர், புக்கர் என்போர் மிகச் சிறந்தவர்களாவர். அக்காலத்தில் சிறப்புற்றிருந்த பிராமண முனிவரும் அறிஞருமான மாதவ வித்யாரண்யர் மற்றும் அவருடைய சகோதரரான வேதத்திற்குப் புகழ் பெற்ற உரையெழுதிய சாயனர் முதலியவர்களின் முலம் ஊக்கவுணர்ச்சிபெற்று அவர்கள் இந்தப் புதிய முயற்சியில் ஈடுபட்டனர், (வரலாற்றாசிரியர்களிடையே இதில் கருத்து வேறுபாடுகளும் உண்டு).விசயநகரப்பேரரசானது நான்கு அரச வம்சத்தினரால் (வம்சம் என்றதும் எனக்கு தற்போது வெளியாகியுள்ள வம்சம் படம்..... சரி சரி நமக்கு தற்போதைய அரசியல் எதற்கு....) ஆளப்பட்டது. இதில் முதலாவது அரச மரபு இதைத் தோற்றுவித்த சங்கமரின் பெயரால் வழங்கப்படுகிறது, மற்ற மரபுகள் சளுவ, துளுவ மற்றும் அறவீடு ஆகும். புகழ்பெற்ற நமது கிருக்ஷ்ணதேவராய மன்னர் துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர், இவருடைய அவையில்தான் அஷ்டதிக் கஜங்கள் (எட்டு யானைகள்) என்றழைக்கப்பட்ட புலவர்கள் கவிபாடினார்கள். (புலவர்கள் கவிபாடுவதை பற்றி கேட்டாலே எனக்கு 23ம் புலிகேசி படத்தில் வரும் பாணப்பத்திர ஓணான்டிதான் நினைவுக்கு வந்துவிடுகிறார்... சரி சரி திட்டாதீர்கள்....)கி.பி. 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தில்லியை ஆண்ட துக்ளக் மன்னர்கள் தக்காணத்தின் மீது கண்வைத்த உடன் மாட்டிக்கொண்டவர்கள் விசயநகர அரசர்கள் எனினும் அதுவே விசயநகரப் பேரரசின் வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. படையெடுத்த சுல்தான்கள் ஹரிகரர், புக்கர் இருவரையும் பிணைக்கைதியாக பிடித்து சென்று அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்கள் பிறகு அங்கிருந்து தமிழ் சினிமாவில் தப்பிப்பது போல் தப்பித்து விசயநகரம் வந்தடைந்தவுடன் இருவரையும் வரவேற்று முதல் வேலையாக அவர்களை மறுபடியும் இந்து மதத்திற்கு மாற்றினார் மாதவ வித்யாரண்யர்...


ஐயையோ  மனம் தெளிவு பெறுகிறது.... ஒரு 'வ' குடித்துவிட்டு வருகிறேன்..... பிறகு தொடருவோம்.....

போதுமே போலித்தனம்!

தினமணி தலையங்கம்: போதுமே போலித்தனம்!


First Published : 28 Aug 2010இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும்பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக்கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!நன்றி: தினமணி

Monday, September 6, 2010

ஆரோக்கிய மயக்கம்


இனிய தலைவர்களே...

இன்று நாம் உடல்நலக் குறிப்புகள் சிலவற்றைக் காண்போமா?

என்னடா இவன் மதுமயக்கம் என்று பெயரை வைத்துக்கொண்டு உடல்நலக் குறிப்புகள் தருகிறானே என்று முனுமுனுப்பது கேட்கிறது. என்ன செய்வது தலைவர்களே சில விஷயங்களில் தெளிவாகவும் இருக்க வேண்டியுள்ளதே!!!!!

(குறிப்பு - இந்த உடல் நலக்குறிப்புகள் யாவும் சிவகாசி ஜி. மாறன் தொகுப்பித்த எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் என்ற புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.)

இந்த இடுகையில் அடிபட்ட காயம் மற்றும் ரணங்கள் குணமாவதற்கு தேவையான சில சித்தவைத்தியக் குறிப்புகளைப் பார்ப்போம்.1. சாதாரண புண்கள் மற்றும் காயங்களுக்கு கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து போடலாம்.

2. புண்களை கழுவ புன்னை மரப்பட்டையை கக்ஷாயம் செய்து கழுவலாம்.

3. புரையோடியபுண் காயம் ஆற அத்திப்பால் தடவலாம்.

4. வெட்டுக்காயங்கள் ஆற வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம்.

5. ரணங்கள் ஆற பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் தடவிவர குணமாகும்.

6. வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க குப்பைமேனி இலையை அரைத்து காயத்தின் மீது தடவிவர புண் குணமாகும்.

7. காயம் குணமாக அரிவாள்மனை பூண்டு இலை, குப்பைமேனி இலை, பூண்டு, மிளகு சேப்த்து அரைத்துக் கட்டலாம்.

8. வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற புங்கன் இலையை அரைத்து காயத்தின் மீது கட்டலாம்.

9. நாள்பட்ட புண் ஆற புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவிவர புண் ஆறும்.

10. சிராய்ப்புக் காயங்களுக்கு இலவம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவிவர குணமாகும்.

11. வெட்டுக்காயம் குணமாக இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம்.

தெளிவு மயக்கம் பெறுகிறது..... நன்றி தலைவர்களே.... பிறகு மற்றொரு சித்தவைத்தியக் குறிப்புடன் சந்திப்போம்....

Saturday, September 4, 2010

மது மயக்கம்

முக்கிய தகவல்கள்


மது மயக்கம் என்று பெயர் வைத்துவிட்டு மதுவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றால் நன்றாக இராது அல்லவா....

சமீபத்தில் என்னுடைய வலைத்தள நண்பர் ஒருவர் பின்வரும் முக்கிய தகவல்களை அளித்திருந்தார் அதிலிருந்து நமது நண்பர்களுக்காக சில.....

சரக்குப் பெயர் --- தமிழ் பெயர்

1. மிடாஸ் கோல்டு - தங்கமகன்

2. நெப்போலியன் - ராஜராஜசோழன்

3. கோல்கொண்டா - கங்கை கொண்டான்

4. வின்டேஜ் - அறுவடைத் தீர்த்தம்

5. ஆபிசர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்

6. சிக்னேச்சர் - கையொப்பம்

7. ஓல்டு மங் - மகா முனி

8. ஓல்டு காஸ்க் - பீப்பாய் சரக்கு

9. கேப்டன் - தனிச் சரக்கு

10. ஜானிவாக்கர் - வெளியே வா

11. ஓட்கா - சீமைத்தண்ணி

12. கார்டினல் - பொதுக்குழு

13. மானிட்டர் - உளவுத்துறை

14. பேக் பைப்பர் - "ஊத்து'க்காரன்

15. சீசர் - கரிகாலன்

16. மெக்டவல் - "மட்டை' வீரன்

17. டிரிபிள் கிரவுன் - மூணு தலை

18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி

19. ராயல் சேலன்ஞ் - நாற்பதும் நமதே

20. ஹேவார்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

21. ஜிங்காரோ - சிங்காரி சரக்கு

22. கோல்டன் ஈகிள் - தங்க கழுகு

23. கிங் பிஷர் - மீன்கொத்தி

24. மார்பியூஸ் - மயக்கி

மயக்கம் தொடரும்......

[நன்றி - மகிபன் ஜான் (காதல் குழு)]

Friday, September 3, 2010

தேர்வு மயக்கம்ஐ.ஏ.எஸ் தேர்வில் (ஏ)மாற்றம்


நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த முதனிலை தேர்வு முறையை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC)  தற்போது மாற்றி அமைத்துள்ளது.

இதுவரையில் முதனிலை தேர்வில் இரண்டு தாள்கள் இருந்தன 1.பொதுப் பாடம் 2.விருப்ப பாடம்.  தற்போது மாற்றியுள்ள பாடத்திட்டதிலும் இரண்டு தாள்கள் 1. ஒழுக்கநெறி மற்றும் அறஇயல் 2.உளச் சார்புத் தேர்வு.

நம்முடைய கிராமப்புற மாணவர்கள் பட்டம் பெற்று இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகே UPSC தேர்வுகளைப் பற்றிய ஒரு தெளிவு பெறுகிறார்கள், அதன் பிறகு அவர்கள் அத்தேர்வுக்கு தயார் செய்யவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  இது மட்டும் அல்லாமல் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சினை ஆங்கிலம்..  தமிழ் வழியில் கல்வி பயின்ற நம்முடைய மாணவர்கள் இவ்வகையில் படும்பாடு மிகக் கொடுமை..

வரவிருக்கின்ற தேர்வு முறையில் இருக்கும் உளச் சார்புத் தேர்வு என்ற தாளில் உளவியல் ரீதியிலான கேள்விகளும் கணிதமுறையிலான கேள்விகளும் நிச்சயம் இடம்பெறும் என்று கூறுகின்றனர் கல்வியாளர்கள்,  இந்த மாற்றம் கிராமப்புற மாணவர்களை மிகக்கடுமையாக பாதிக்கும். இது ஒரு குறை அல்ல என்று மேலோட்டமாக தெரிந்தாலும் உள்நோக்கி ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியும் அது என்னவெனில் கிராமப்புற மாணவர்கள் இந்த மாதிரியான பாடத்திட்டத்தில் படிக்காதவர்கள் மேலும் மெட்ரிகுலஷன் மற்றும் CBSE எனப்படும் பாடத்திட்டதில் படிக்கும் நகர்ப்புற மாணவர்கள் இம்முறையிலான வடிவில் தயார் செய்யப்படுகிறார்கள். ஆகவே மொத்தத்தில் இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவே அமையும்.

காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் வரவேற்கக் கூடியதே என்றாலும் அது ஒரு சாரார்க்கு பலனளிப்பதாகவும் பெரும்பாண்மை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அமையக்கூடாது, மேலும் அரசாங்கம் எல்லோருக்கும் ஒரே விதமான கல்வி முறையை வழங்கிய பின்னர் தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்...

மயக்கம்ம்ம்ம்...............

Thursday, September 2, 2010

அரசியல் மயக்கம்

சென்னை பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரை சூட்டவேண்டும்..... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:

மயக்கம் 2:

இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவர்கள் யாரும் இல்லையோ.... ஒரு வேளை அத்தகைய தலைவர்கள் தமிழ் மண்ணில் பிறக்கவில்லையோ... அல்லது அவர்களது பெயர்கள் எல்லாம் நம்முடைய பெரியார் பேரனுக்கு மறந்துவிட்டதோ.... 

(ராஜீவ் காந்தியின் பெயரில் இங்கு பல சாலைகள் இருப்பதை நாம் நினைவில் கொள்ளலாம். ச்மீபத்தில் கூட OMR சாலைக்கு ராஜீவ் காந்தி சாலை என்று பெயர் வைத்தார்கள்)

Wednesday, September 1, 2010

ஆரம்ப மயக்கம்

அன்பு நன்பர்களே...


என் நன்பர்களை பார்த்த பின் நானும் ப்ளாக் எழுதுகிறேன் என்று கிளம்பும் போது தெரியவில்லை....... இப்பொழுது தான் புரிகிறது அதன் அருமை...

நான் எழுத ஆரம்பித்தவுடன் "புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட" பழமொழிதான்  நினைவுக்கு வந்தது.....


மயக்கம் வருகிறது பிறகு சந்திக்கிறேன்.....