Friday, September 3, 2010

தேர்வு மயக்கம்



ஐ.ஏ.எஸ் தேர்வில் (ஏ)மாற்றம்


நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த முதனிலை தேர்வு முறையை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC)  தற்போது மாற்றி அமைத்துள்ளது.

இதுவரையில் முதனிலை தேர்வில் இரண்டு தாள்கள் இருந்தன 1.பொதுப் பாடம் 2.விருப்ப பாடம்.  தற்போது மாற்றியுள்ள பாடத்திட்டதிலும் இரண்டு தாள்கள் 1. ஒழுக்கநெறி மற்றும் அறஇயல் 2.உளச் சார்புத் தேர்வு.

நம்முடைய கிராமப்புற மாணவர்கள் பட்டம் பெற்று இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகே UPSC தேர்வுகளைப் பற்றிய ஒரு தெளிவு பெறுகிறார்கள், அதன் பிறகு அவர்கள் அத்தேர்வுக்கு தயார் செய்யவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  இது மட்டும் அல்லாமல் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சினை ஆங்கிலம்..  தமிழ் வழியில் கல்வி பயின்ற நம்முடைய மாணவர்கள் இவ்வகையில் படும்பாடு மிகக் கொடுமை..

வரவிருக்கின்ற தேர்வு முறையில் இருக்கும் உளச் சார்புத் தேர்வு என்ற தாளில் உளவியல் ரீதியிலான கேள்விகளும் கணிதமுறையிலான கேள்விகளும் நிச்சயம் இடம்பெறும் என்று கூறுகின்றனர் கல்வியாளர்கள்,  இந்த மாற்றம் கிராமப்புற மாணவர்களை மிகக்கடுமையாக பாதிக்கும். இது ஒரு குறை அல்ல என்று மேலோட்டமாக தெரிந்தாலும் உள்நோக்கி ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியும் அது என்னவெனில் கிராமப்புற மாணவர்கள் இந்த மாதிரியான பாடத்திட்டத்தில் படிக்காதவர்கள் மேலும் மெட்ரிகுலஷன் மற்றும் CBSE எனப்படும் பாடத்திட்டதில் படிக்கும் நகர்ப்புற மாணவர்கள் இம்முறையிலான வடிவில் தயார் செய்யப்படுகிறார்கள். ஆகவே மொத்தத்தில் இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவே அமையும்.

காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் வரவேற்கக் கூடியதே என்றாலும் அது ஒரு சாரார்க்கு பலனளிப்பதாகவும் பெரும்பாண்மை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அமையக்கூடாது, மேலும் அரசாங்கம் எல்லோருக்கும் ஒரே விதமான கல்வி முறையை வழங்கிய பின்னர் தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்...

மயக்கம்ம்ம்ம்...............

No comments:

Post a Comment