Friday, December 31, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


புத்தாண்டு பிறக்கயிலே
புது நம்பிக்கை துளிர்க்கட்டும்
மனித இனம் சிறப்புற்று
மானுடம் வாழட்டும்..

Friday, December 24, 2010

HAPPY CHRISTMAS


இனிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Saturday, December 18, 2010

பவளப்பாறைகளின் அழகு

வணக்கம் குடிமகன்களே........
மிக தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் தொடர்ச்சியான பணிகளின் காரணமாக நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. பதிவை எழுதலாம் என்று அமர்ந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் தான் நினைவுக்கு வந்தது.. தமிழன் இந்தியாவை தலைகுனிய வைத்ததை நினைக்கும் போது குடித்த சரக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வேளியே வருகிறது என்பதால் மாறுதலுக்கு இந்த பதிவில் கண்களுக்கு குளிர்சியான படங்களை மட்டுமே போட்டிருகிறேன்.


Wednesday, November 3, 2010

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்நண்பர்களுக்கு இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

Monday, November 1, 2010

ஒபாமா - வைகோ

ரெங்கும் ஒரே பேச்சு - வேறொன்றும் இல்லை ஒபாமாவின் வருகைதான் அது. எந்த நாளிதழை திருப்பினாலும் ஒபாமாவைப் பற்றியே இருக்கிறது. இந்த நேரத்தில் கடந்த வருடம் ரஷ்யாவில் நடந்ததை நினைவு கூற விரும்புகிறேன், இராணுவம் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாஸ்கோ சென்றிருந்தார் ஒபாமா, அவர் ரஷ்யா வந்த செய்தியை அந்நாட்டின் நாளிதழ்கள் மிகச் சாதாரண செய்தியாக வெளியிட்டிருந்தன. மக்களில் பலருக்கு அவர் ரஷ்யா வந்ததே தெரியவில்லை. அங்கெல்லாம் தலைவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதில்லை. ஒபாமா என்ற உணர்ச்சிகர பேச்சாளரைப் போல பல மடங்கு அதிகமாக பேசும் தலைவர்களை பார்த்து அவர்களின் செயல்களால் நொந்தவர்கள் அவர்கள்.

எத்தனை கோடி ரூபாய் வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம். ஊழல் செய்த பணத்தில் பாதியை செலவு செய்தாவது ஊழல் தொடர்பான வழக்கை ஒன்றுமில்லாமல் செய்யலாம், உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கூறிய கருத்தையும்
இறுதித் தீர்ப்பல்ல என்று வசனம் பேசலாம், இனம் மொழி என்று பேசி மக்களின் நாடியை தன் உள்ளங்கையில் வைத்திருக்கலாம், பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போகும்போது அதை விட்டுவிட்டு நிறத்தையும் பிடித்துக் கொள்ளலாம், இவையனைத்தும் நடப்பது வேறெங்கும் இல்லை நமது இந்தியத் திருநாட்டில்தான்.

வைகோ - தன்மானத் தலைவர், மேடைகளில் முழங்கும் போது தன் எதிரே அமர்ந்திருப்பவர்களை தான் உணர்ச்சிவசப்படுவது போல் உணர்ச்சிவசப்பட வைப்பவர். இனம் மொழி என்ற வார்த்தைகளை தமிழக முதல்வர் கலைஞருக்குப் பிறகு அதிகமாக உபயோகித்தவர் இவர் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்னவென்றால் இந்தியா வரும் ஒபாமாவை சிறப்பான முறையில் வரவேற்கவேண்டுமாம். வரவேற்பது நம் பண்பாடு என்பது இருக்கட்டும் ஆனால் இந்த தன்மானத் தலைவருக்கு திடீரென ஏற்பட்ட உணர்வுக்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா.. கருப்பு நிறத் தலைவரை வரவேற்கவேண்டுமாம், அதே சமயத்தில் அவரின் பொருளாதார கொள்கைகளைப் பற்றி இப்போது விமர்சிக்கக் கூடாதாம்.

நிறம் கருப்பாயிருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன? 66000 அப்பாவிப் பொதுமக்களை ஈராக்கில் கொன்று குவித்துவிட்டு உயிர்ப்பசி அடங்காமல் ஆப்கானிஸ்தானிலும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க இராணுவத்தின் தலைவர்தானே ஒபாமா. ஈராக் போரில் ஈடுபட்டது ஜார்ஜ புஷ்ஷின் ஆட்சியில்தான் என்றாலும் அதைப்பற்றிய உண்மைகளை மறைத்தது ஒபாமாவின் அரசாங்கம்தானே.. அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற இந்தியாவை நெருக்கியது யார்? இந்தியர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்படியான சட்டம் இயற்ற துடித்தது இதே ஒபாமாதானே..

இப்போது நிறத்தைப்பற்றி பேசும் வைகோ ஒபாமாவின் இச்செயல்களை ஏற்றுக்கொள்வாரா? இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராஜபட்சவை நீங்கள் எதிர்த்தது போல் யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள், ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்க ஒரு நாடு ஈடுபட்டபோது தமிழ் மொழி தமிழன் என்ற வார்த்தைகளை உபயோகித்து அதிகமாக அரசியல் இலாபம் அடைந்த இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் வாய்மூடி மெளனம் சாதித்த வேளையில் அதை நீங்கள் எதிர்த்தவிதம் உண்மையில் அருமை. ஆனால் இப்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் படித்தபிறகு என்னசொல்வதென்றே தெரியவில்லை.

இலங்கையின் ராஜபட்ச இந்தியாவுக்கு வரக்கூடாது என்று சொல்லும் நாம் ஒபாமாவை மட்டும் ஏன் வரவேற்கவேண்டும். இலங்கையில் போனால் உயிர் ஆனால் ஆப்கானிஸ்தானில் போனால் மயிரா?

Wednesday, October 27, 2010

​பெண்களும் இடஒதுக்கீடுகளும்...


காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் ​பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் த​லைவர் ​​சோனியா காந்தி அறிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் ​பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்​டை ​பெற்றுத்தர எவ்வள​வோ முயன்றும் முடியாமல் ​போக​வே இந்த முடி​வை எடுத்திருப்பார் ​போலும், கிடப்பில் ​போடப்பட்டுள்ள இந்த ம​சோதா​வை தூசு தட்டி நி​றை​வேற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.

கடந்த உள்ளாட்சித் ​தேர்தல்களில் ​​பெண்களுக்கு 33 சதவிகித இடம் ​வழங்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 10 லட்சம் ​பெண்கள் உள்ளாட்சி அ​மைப்பில் பிரதிநிதித்துவம் ​பெற்றார்கள், இது​வே ஒரு உலக சாத​னைதான், ஆனாலும் இதில் வருத்தம் என்ன​வென்றால் ​வெற்றி ​பெற்ற ​பெண்களில் சுமார் 90 சதவிகிதம் ​பேர் தங்களின் ஜனநாயகக் கட​மை​யை ஆற்றுவதில்​லை என்பதுதான். ​வெற்றி ​பெற்ற ​பெண்களின் கணவர்க​ளோ அல்லது மகன்க​ளோதான் மக்கள் பிரதிநிதிக்குரிய அ​​னைத்து ​வே​லைக​ளையும் பார்க்கிறார்கள். இந்த நி​லை மாற​வேண்டும் மாறினால்தான் இடஒதுக்கீட்டுக்கு அர்த்தம் இருக்கும் இல்​லை​யெனில் 33 சதவிகிதம் அல்ல 66 சதவிகிதம் இடஒதுக்கீடு ​​கொடுத்தாலும் அது வீண்தான்.
​பெண்க​ளே.... எத்த​னை நா​ளைக்குதான் வீட்டுக் கணக்​கை​யே ​போட்டுக்கிட்டு இருப்பீங்க? ​கொஞ்சம் நாட்டுக் கணக்​​கையும் ​போட வாங்க...

Wednesday, October 13, 2010

தீவுகளின் வாழ்க்​கைப் ​போராட்டம்

ந்த வருஷம் வெயில் அதிகம்பா, வெயில் காலத்துல மழை பிய்ச்சு உதறுது, சென்னையில கல்மழை பெய்யுதாமே... என்று நம்மில் பலரும் பேசி இருப்போம். ஆனால் அதற்கான காரணத்தை அறிய முற்படும்போதுதான் மயக்கம் வருகிறது.
உலகின் இன்றைய மிகமுக்கியப் பிரச்சினை புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம். ஆனால் நம்மில் பலருக்கும் அதைப்பற்றிய அக்கறை சுத்தமாக கிடையாது. அட நம்மலால எப்படிப்பா பூமி வெப்பமாகும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு சில கேள்விகள்.
1. பிளாஸ்டிக் குப்பைகளை மற்ற குப்பைகளிலிருந்து பிரித்து வைத்திருக்கிறீர்களா?
2. டயர், பிளாஸ்டிக், மைக்கா போன்றவற்றை எரிக்காமல் இருந்திருக்கிறீர்களா?
3. பெட்ரோல் வாகனங்களை (கார், பைக்) ஓட்டாமல் இருந்திருக்கிறீர்களா?
தவாருவா தீவு
இந்தக் கேள்விகளில் ஒன்றிற்காவது இல்லை என்று பதில் கூறினாலும் நிச்சயமாக பூமிவெப்பமடைய நாமும் ஒரு காரணம்தான். உலக வெப்பமயமாதலால் பனிமலைகள் உருகும். கடல் மட்டம் உயரும் என்பதெல்லாம் திரும்ப திரும்ப சொல்லப்படும் விஷயங்கள் ஆனால் அவ்வாறு உருகும்பட்சத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது கடல் நடுவில் குட்டி குட்டியாக தோற்றமளிக்கும் சிறு சிறு தீவுகள்தான். கடல்மட்டம் உயரும் போது நிலப்பரப்பை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் கூட அதைச் சமாளிக்கும் ஆனால் கடல் நடுவே வாழும் மக்களை பற்றி சிந்தித்துப் பாருங்கள், இயற்கை தந்த அழகுச் சோலைகளாய் இன்று காட்சியளிக்கும் தீவுகள் அனைத்தும் கடலில் மூழ்கி இருந்த இடம் தெரியாமல் போகும்.
​பெர்முடா தீவு
​போர்​டோ ரிக்​கோ
சரி விஷயத்துக்கு வருவோம். இந்தியா, சீனா போன்ற 4 வளரும் நாடுகள் இனைந்து BASIC என்ற அமைப்பினை ஏற்படுதிதியுள்ளன (B - பிரேசில், AS - தென்ஆப்பிரிக்கா, I - இந்தியா, C - சீனா). கடந்த ஆண்டு நடந்த கோபன் ஹேகன் மாநாட்டில் இந்தியா, சீனா உள்ளிட்ட உலகநாடுகள் வைத்த கோரிக்கைகளை வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. கோரிக்கை என்னவென்றால் 1990ல் இருந்த புவிவெப்பநிலையிலிருந்து 2டிகிரி செல்சியஸ் க்கு மேல் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உலகநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் வலியுறுத்தின. ஆனால் வளர்ந்த நாடுகள் 2000ல் இருந்த வெப்பநிலையிலிருந்து 2டிகிரி செல்சியஸ் ஏறாமல் பார்த்துக்கொள்கிறோம் என புரட்டிப் போட்டார்கள். ஆனால் இது கூட முழுக்க முழுக்க வளர்ந்த நாடுகளின் நிர்பந்தத்தாலேயே கோரப்பட்டது. ஏனெனில் குட்டித்தீவுகளின் அமைப்பான AOSIS (Association Of Small Island States) வெப்பநிலையை 1.5டிகிரி செல்சியஸ் க்கு அதிகமாகக் கூடாது என போராடியது. இந்த தீவுக்கூட்டங்களின் கூக்குரலை யாரும் சட்டை செய்யவே இல்லை பிரச்சினை பெரிதாகி பூதாகரமாகும் தருவாயில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் புவிவெப்பமடைவதற்கான பழியை வளரும் நாடுகளின் மீது போட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் வளர்ந்த நாடுகள் 50 வருடங்களுக்கு முன்பு அடைந்த வளர்ச்சியைக் கூட இன்னும் எட்டாத நிலைதான் நமக்கு.
உலகமே பாதிக்கப்படும் போது வளர்ந்த நாடு, வளரும் நாடு, குட்டித் தீவுகள் என்ற பாரபட்சம் எதற்கு? எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டியதுதானே என்று அளவுக்கு அதிகமான போதையில் இருந்தபோது என்னுடைய சிறுமூளையில் தோன்றியது. ஆனால் மயக்கம் தெளிந்த பிறகே உண்மை புரிந்தது. புவிவெப்பமயமாதலின் விளைவாக நாடுகளுக்கிடையே ஏற்படும் உடன்பாடுகளால் அதிகப்படியான நிதிச்சுமை ஏழை நாடுகளுக்கு மட்டுமே! நிதிச்சுமையைத் தாங்கக்கூடிய சக்தி மற்ற ஏழை நாடுகளுக்கு உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் விதமாக பல உபகரணங்கள் (சோலார் விளக்குகள், சோலார் ரிக்ஷா) இப்போது சந்தையில் இருக்கின்றன. இவையனைத்தும் யார் மொத்தமாகத் தயாரிக்க முடியும்? எடுத்துக்காட்டாக வளர்ந்த நாடுகள் தங்களுடைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த உபகரணங்களை மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கும், அதே பொருளைத் தயாரிக்க பின்தங்கிய நாடுகள் பத்து மடங்குக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டிவரும். இந்தச் சூழ்நிலையில் வளரும் நாடுகள் அந்த உபகரணங்களை மொத்தமாக உற்பத்தி செய்கின்ற நாட்டிடமிருந்து வாங்கும்போது இலாபம் யாருக்கு? 
வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் பின்விளைவே இன்றைய புவிவெப்பமயமாதலும் ஓசோனில் விழுந்த ஓட்டையும். காரணமும் அவர்களே! இலாபமும் அவர்களுக்கே! தயிரிலிருந்து வெண்ணை எடுப்பவர்களை பார்த்திருப்போம், தண்ணிரிலிருந்து வெண்ணை எடுக்கும் கூட்டமும் இங்கேதான் இருக்கிறது.
​தை​மோர் தீவில் வாழும் ​பெண்கள்
இந்த வாரம் சீனாவின் தியான்ஜின் நகரில் கூடிய மாநாட்டில் BASIC மற்றும் AOSIS நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு புவிவெப்பமயமாவதைப்பற்றி விவாதித்தனர். இது உலகஅரங்கில் மிகச்சிறந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதுநாள் வரையில் வளரும் நாடுகளின் மீது பழி போட்ட வல்லரசுகள் இந்த குட்டித்தீவுகளின் கோரிக்கைகளை தங்களுடைய சுயலாபத்துக்கென பயன்படுத்தி வந்தன. ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனாவின் கடும் முயற்சியினால் குட்டித்தீவுகளின் அமைப்பான AOSIS மற்றும் வளரும் நாடுகளின் அமைப்பான BASIC ஆகியவை நெருங்கி வந்துள்ளன. மாநாட்டில் ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லையெனினும் இந்த நெருக்கம் வளர்ந்த நாடுகளுக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது.
எது எப்படியோ சிறிய தீவில் வாழ்ந்தாலும் பெரிய நாட்டில் வாழ்ந்தாலும் மனித சமுதாயம் காக்கப்படவேண்டும். இன்றைய பொழுது கழிந்தால் போதும் என்று நினைக்காமல் நாளைய தலைமுறை சிறப்புற்று வாழ இப்போதே நாம் அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதே என்னைப்போன்ற பெருங்குடிமகன்களின் விருப்பம்.

Wednesday, October 6, 2010

அப்படி எழுதுடா என் ​செல்லம்..மீபத்தில் எனது ​மெயிலுக்கு வந்த இந்த படங்க​ளை பார்த்து ​நெடு​நேரம் சிரித்துக்​கொண்​டே இருந்​தேன்... ​திருவள்ளுவர் 23ம் புலி​கேசி படத்திற்கு எப்​போது பாடல் எழுதினார்? ​பையனின் எழுத்து திற​மை நன்று எனினும் இவ்வளவு திற​மையாக எழுதுபவன் பாடத்​தை படித்துவிட்டு எழுதியிருந்தால் சிறப்பான மதிப்​பெண் ​பெறுவா​னே என்ற எண்ணம் ​தோன்றாமலில்​லை.

தங்க முத்துக்கள்...


முத்துக்கள் ​வெண்​மை நிறத்தில் இருப்ப​தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் தங்கநிற முத்​துக்க​ளை பார்த்ததுண்டா? நம்ப முடியவில்​லையா? இது எதுவும் முலாம் பூசப்பட்ட​தோ அல்லது தஙக நிற சாயம் பூசப்பட்ட​தோ அல்ல இயற்​கையி​லே​யே தங்கநிறத்தில் உருவாகும் முத்துக்கள்..

தங்கமுத்து வளர்க்கப்படும் தீவு

ப்படிப்பட்ட முத்துக்கள் இருக்கிறதா என்றால் இருக்கிறது ஆனால் இங்கல்ல பிலிப்​பைன்ஸ் நாட்டில். இந்நாட்டின் ​தென்​மேற்கு பகுதியில் உள்ள பலாவன் தீவில் கடலுக்கடியில் மிகப் பாதுகாப்பாக இந்த தங்க முத்துச்சிப்பி வளர்க்கப்படுகிறது. இந்த தங்க முத்துச்சிப்பி ஒரு முத்​தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் ஆகும், 5 வருடங்களுக்கு பிறகு இ​வை ​கொல்லப்பட்டு முத்து எடுக்கப்படுகிறது. 

தங்கமுத்துச்சிப்பி
ஆயுத​மேந்தி காவல் காக்கும் ப​டைவீரர்கள்

கடலுக்கடியில் ​தொங்கவிடப்பட்டு
 வளர்க்கப்படும் முத்துக்கள்

முத்துச்சிப்பிகள் ​கொல்லப்பட்டு
தங்கமுத்து ​​வெளி​யே எடுக்கப்படுகிறதுஉள்ளத்​தை கொள்​ளையிடும்
தங்கமுத்தாலான ஆபரணங்கள்தங்கமுத்​தாலான ஆபரணத்​தை 
அணிந்திருக்கும் ​பெண்​ணை ​
சைட் அடிக்கும் தாத்தாஇந்த தங்க முத்​துக்க​ளைக் ​கொண்டு விதவிதமான ஆடம்பர ஆபரணங்க​ளை ​செய்து வருகின்றனர் இம்மக்கள். ஆனால் இதன் வி​லைதான் சாமாணியர்களுக்கு எட்டும்படி இருக்குமா என ​தெரியவில்​லை, இருப்பினும் இ​தைக் ​கொண்டு ​செய்த ந​கைக​ளைப் பார்க்கும் ​போது உண்​மையி​லே​யே உள்ளம் ​மயக்கம் ​​​பெறுகிறது..