Monday, September 6, 2010

ஆரோக்கிய மயக்கம்


இனிய தலைவர்களே...

இன்று நாம் உடல்நலக் குறிப்புகள் சிலவற்றைக் காண்போமா?

என்னடா இவன் மதுமயக்கம் என்று பெயரை வைத்துக்கொண்டு உடல்நலக் குறிப்புகள் தருகிறானே என்று முனுமுனுப்பது கேட்கிறது. என்ன செய்வது தலைவர்களே சில விஷயங்களில் தெளிவாகவும் இருக்க வேண்டியுள்ளதே!!!!!

(குறிப்பு - இந்த உடல் நலக்குறிப்புகள் யாவும் சிவகாசி ஜி. மாறன் தொகுப்பித்த எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் என்ற புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.)

இந்த இடுகையில் அடிபட்ட காயம் மற்றும் ரணங்கள் குணமாவதற்கு தேவையான சில சித்தவைத்தியக் குறிப்புகளைப் பார்ப்போம்.



1. சாதாரண புண்கள் மற்றும் காயங்களுக்கு கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து போடலாம்.

2. புண்களை கழுவ புன்னை மரப்பட்டையை கக்ஷாயம் செய்து கழுவலாம்.

3. புரையோடியபுண் காயம் ஆற அத்திப்பால் தடவலாம்.

4. வெட்டுக்காயங்கள் ஆற வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம்.

5. ரணங்கள் ஆற பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் தடவிவர குணமாகும்.

6. வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க குப்பைமேனி இலையை அரைத்து காயத்தின் மீது தடவிவர புண் குணமாகும்.

7. காயம் குணமாக அரிவாள்மனை பூண்டு இலை, குப்பைமேனி இலை, பூண்டு, மிளகு சேப்த்து அரைத்துக் கட்டலாம்.

8. வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற புங்கன் இலையை அரைத்து காயத்தின் மீது கட்டலாம்.

9. நாள்பட்ட புண் ஆற புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவிவர புண் ஆறும்.

10. சிராய்ப்புக் காயங்களுக்கு இலவம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவிவர குணமாகும்.

11. வெட்டுக்காயம் குணமாக இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம்.

தெளிவு மயக்கம் பெறுகிறது..... நன்றி தலைவர்களே.... பிறகு மற்றொரு சித்தவைத்தியக் குறிப்புடன் சந்திப்போம்....

No comments:

Post a Comment